லண்டனில் இரயிலுக்காக இரவு 10.30 மணிக்கு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த மோசமான சம்பவம்! புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார்
லண்டன் இரயில் நிலையத்தில் இரவில் இரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் Waterloo இரயில் நிலையத்தில் கடந்த மாதம் 15ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் நடந்துள்ளது.
அப்போது பெண்ணொருவர் இரயிலுக்காக காத்திருந்தார், அவரை பின்னால் இருந்து அணுகிய ஆண் ஒருவர் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறான். இதன்பின்னர் அங்கிருந்து வேகமாக சென்றிருக்கிறான்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் இது தொடர்பில் தகவல் இருக்கும் என நம்பும் பொலிசார் அது தங்கள் விசாரணைக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.