லண்டனில் அதிகாலை 5 மணிக்கு ஜாகிங் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையான சம்பவம்
லண்டனில் ஜாகிங் சென்ற இளம்பெண் காலை நேரத்தில் மர்ம நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு லண்டனின் Streatham Commonல் தான் இச்சம்பவம் கடந்த 23ஆம் திகதி காலை 5 மணியளவில் நடந்துள்ளது.
அப்போது ஜாகிங் சென்று கொண்டிருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் தாக்கி துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். பின்னர் உடனடியாக அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தற்போது அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அதன்படி சந்தேக நபர் கருப்பு நிறஆடைகள், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்ப்பதற்கு நல்ல உயரமாக இருப்பார் என தெரியவந்துள்ளது. கு
றித்த நபர் தொடர்பிலோ அல்லது சம்பவம் குறித்தோ யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.