லண்டனில் அரசு வீட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஹமாஸ் தலைவர்: அதிரவைக்கும் ஒரு தகவல்
லண்டனில், அரசு மானியம் வழங்கிய வீடு ஒன்றில், ஹமாஸ் தலைவர் ஒருவர் பல ஆண்டுகளாக வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
லண்டனில் வாழும் ஹமாஸ் தலைவர்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஹமாஸ் உறுப்பினர் என அறிவிக்கப்பட்டுள்ள Muhammad Qassem Sawalha (62) என்னும் நபர், பல ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளதாக, The Sunday Times பத்திரிகை தெரிவித்துள்ளது.
1900களில் இஸ்ரேலிலிருந்து இங்கிலாந்துக்கு தப்பி வந்த முகமது, 2000களின் துவக்கத்தில் பிரித்தானிய பாஸ்போர்ட்டும் பெற்றுள்ளார்.
Getty Images
ஆனாலும், அதன் பிறகும் அவர் ஹமாஸுக்காக வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. இஸ்ரேலால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள முகமது, ஹமாஸ் உறுப்பினர் என்னும் வகையில், இப்போது நாடு திரும்பினாலும் அவரைக் கைது செய்ய இஸ்ரேல் தயாராக உள்ளது.
தன் மனைவியான Sawsan (56)உடன் வாழ்ந்து வரும் முகமதுக்கு, லண்டனில், 136,500 பவுண்டுகள் அரசு மானியத்தில் 390,000 பவுண்டுகள் மதிப்புடைய இரண்டு மாடி வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியில் யூதர்கள்
முகமது, லண்டனிலுள்ள Barnet என்னுமிடத்தில் வாழ்ந்துவருகிறார். Barnet, இங்கிலாந்திலேயே யூதர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் ஒரு இடமாகும்.
அப்பகுதியின் கவுன்சில் தலைவரான Barry Rawlings என்பவர் கூறும்போது, தங்கள் மத்தியில் ஹமாஸ் தலைவர் ஒருவர் வாழ்ந்துவருவதை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Getty Images
முகமதுவின் பின்னணி தொடர்பில் விசாரணை நடத்துவதில் பொலிஸ் மற்றும் அரசுக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ள Barry, தக்க நடவடிக்கையும் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் அதிகரித்துவரும் நிலையில், இங்கு வாழும் யூதர்கள் தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்ய தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு விடயம் வெளியாகியுள்ளதால், கவுன்சில் என்னும் முறையில் உள்ளூர் மக்களுக்கு அந்த உறுதியை அளிப்பது எங்கள் கடமை ஆகும் என்கிறார் Barry.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |