லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால இந்திய சிற்பம் மீண்டும் ஒப்படைப்பு!
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து சட்டவிரோதமாக அகற்றப்பட்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய சிற்பம் மீண்டும் இந்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தியை பிரதேசத்தின் Lokhari கிராமத்தில் இருந்து 1980-களில் காணாமல் போன 'யோகினி' எனும் ஆடு தலை கொண்ட தெய்வ சிற்பம் ஒன்று 1988-ல் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிஐ செய்திகளின்படி, லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில், Art Recovery International அமைப்பின் CEO Chris Marinello, இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் காயத்ரி இஸ்சார் குமாரிடம் (Gaitri Issar Kumar) சிலையை ஒப்படைத்தார்.
இந்தியாவின் இழந்த கலைப்பொருட்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியா பிரைட் திட்டத்தின் (India Pride Project) இணை நிறுவனர் விஜய் குமாரை அழைத்து சிற்பத்தை அடையாளம் காண முடிந்தது.
இந்தியா ஹவுஸில் நடந்த இந்த ஒப்படைப்பு விழாவில் பேசிய காயத்ரி இஸ்ஸார் குமார், மகர சங்கராந்தி அன்று இந்த யோகினியைப் பெறுவது மிகவும் புனிதமானது என்று கூறினார்.
மேலும், இந்த சிற்பம் இப்போது புது தில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) அனுப்பப்படும் என்றும், பிறகு அது தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்படும் என்றும் காயத்ரி இஸ்ஸார் குமார் கூறினார்.
யோகினிகள் தாந்த்ரீக வழிபாட்டில் ஈடுபடும் சக்தி வாய்ந்த பெண் தெய்வங்கள். அவர்கள் ஒரு குழுவாக வணங்கப்படுகிறார்கள், பொதுவாக 64 பேர் கொண்ட குழுக்களாக, மற்றும் வரம்பற்ற திறன்களைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த சிற்பம் லண்டனில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக, லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்கான லண்டனின் முதல் செயலாளரான ஜஸ்பிரீத் சிங் சுகிஜா கூறினார்.
இச்சிற்பம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து, சிற்பத்தின் படங்கள் இணையத்தில் பரவின.

