லண்டனின் தலைசிறந்த இலங்கை உணவகம் Colombo Kitchen: சில புதிய தகவல்கள்
லண்டனின் தலைசிறந்த இலங்கை உணவகமான Colombo Kitchen, புதிய கிளை ஒன்றை துவக்கியுள்ளது. இலங்கை உணவை விரும்பும் வெளிநாடுகளில் வாழுவோர் கூட, இந்த உணவகத்தைத் தேடி வரும் அளவுக்கு அங்கு சுவையான இலங்கை உணவு கிடைக்கும் என அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
புதிய கிளை
தற்போது Colombo Kitchen, தெற்கு லண்டனிலுள்ள Putneyயில் புதிய கிளை ஒன்றைத் துவக்கியுள்ளது. இம்மாதம், அதாவது, மே மாதம் 16ஆம் திகதி, இந்த புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது.
Colombo Kitchen உணவகத்தின் உரிமையாளவும் தலைமை சமையல் கலை நிபுணருமான Sylvia Perera கூறும்போது, எங்கள் உணவகத்துக்கு வருபவர்கள், தாங்கள் லண்டனின் பல பகுதிகளிலிருந்தும், ஏன், வெளிநாடுகளிலிருந்தும்கூட எங்கள் உணவகத்துக்கு வருவதாக கூறும்போது அதை கௌரவமாக கருதுகிறேன். ஆகவேதான் மேலும் பலர் எங்கள் பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் எங்கள் உணவகத்தின் இரண்டாவது கிளையைத் திறப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |