லண்டனில் மூன்று இரவுகளாக காணாமல் போன பள்ளி மாணவி! அதிகரிக்கும் அச்சம்... பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்
லண்டனில் மூன்று இரவுகளாக காணாமல் போன 15 வயது பள்ளி மாணவியின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
லண்டனின் Edgware-ஐ சேர்ந்தவர் தம்சைன் (15). இவர் கடந்த 28ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கடைசியாக காணப்பட்டார்.
இதன்பின்னர் அவர் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் பொலிசார் சிறுமி தம்சைனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
தம்சைன் மாயமாகி மூன்று இரவுகள் ஆகும் நிலையில் எந்தவொரு தகவலும் அவர் குறித்து தெரியாததால் சிறுமி குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் பொலிசார் ஒரு அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அதன்படி தம்சைனை பொதுமக்கள் யாராவது பார்த்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
#MISSING | Can you help find Tamzyne, 15, who was last seen at around 5:20pm in #Edgware #Barnet on 28Sep? ?
— Barnet MPS | North West BCU (@MPSBarnet) September 30, 2021
Pls ☎️ 101 and quote CAD 6309/28SEP with info. pic.twitter.com/7PR8sHO7i1