லண்டனில் நள்ளிரவில் குத்தில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்! சற்று முன் வெளியான புகைப்படம் மற்றும் விவரம்
லண்டனில் 16 வயது சிறுவன் குத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறுவனின் புகைப்படம் மற்றும் விவரம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சர் பிரிதி படேல், இந்த குற்றச் சம்பவங்களை எல்லாம் தடுக்கும் வகையில், புதிய அதிகாரங்களை வெளியிட்டார்.
இந்நிலையில், லண்டனின் Lambeth கடந்த திங்கட் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11.45 மணிக்கு 16 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தான்.
அவன் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், சற்றும் உயிரிழந்து கிடந்த சிறுவனின் பெயர் Keane Flynn-Hartling என்பதும், அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் தான் என்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த சம்பவம் குறித்து, துப்பறியும் தலைமை ஆய்வாளர் Dan O’Sullivan கூறுகையில், லண்டன் தெருக்களில், மற்றொரு வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது,
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான நபரை கண்டுபிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இது குறித்து பலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம்,
ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். Lambeth மற்றும் Southwark பகுதிகளில் உள்ளூர் காவல்துறைக்கு தலைமை தாங்கும் தலைமை கண்காணிப்பாளர் Colin Wingrove, இந்த சம்பவத்தை நினைத்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மற்றொரு குடும்பம், தன்னுடைய மகனை இழந்து வேதனையில் தவிப்பதை நினைக்கும் போது, வருத்தமாக உள்ளது.
எங்கள் சிறப்பு அதிகாரிகள், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருடன் தொடர்பிலே உள்ளன. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, இப்பகுதியினர் உதவ வேண்டும்.
யாரேனும் இதைக் கண்டிருந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
லண்டனில் இந்த ஆண்டு இதுவரை மட்டும் 21 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், 19 பேர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.