லண்டனில் 2 தினங்களுக்கு முன்பு நடந்த கொலை! இறந்து கிடந்த நபர் யார் என்ற விபரம் வெளியானது
பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்த நபரின் புகைப்படம் முதல் முறையாக தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Ilford-ல் உள்ள Harrow சாலையில் கடந்த 28-ஆம் திகதி நடந்த கொடூரமான கத்திகுத்து தாக்குதலில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்போது உயிரிழந்த அந்த இளைஞனின் பெயர் Kamran Khalid என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று அதிகாலை 3.54 மணியளவில் Kamran Khalid, சண்டை காரணமாக அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்த பொலிசார் இளைஞனை காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால், Kamran Khalid சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து Metropolitan செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை Ilford-ல் நடந்த கத்தி குத்து தாக்குதலில் Kamran Khalid என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில்15 வயது மதிக்கத்தக்க சிறுவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிறுவன் யார் என்பதை சட்ட காரணங்களுக்கால் வெளியிட முடியாது. வரும் 1-ஆம் திகதி Barkingside Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.