லண்டனில் நள்ளிரவில் குத்தி கொல்லப்பட்ட 19 வயது இளைஞன் யார்? வெளியான புகைப்படம்: சம்பவ இடத்தில் வந்து கதறி அழுத தாய்
லண்டனில் 19 வயது இளைஞன் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த இளைஞனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் Sydenham-ல் உள்ளூர் நேரப்படி இரவு 9.20 மணிக்கு 19 வயது இளைஞன் ஒருவன் கத்தி குத்து காயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பொலிசார் ஆம்புலன்ஸ் அழைத்து வந்து மருத்துவ உதவியுடன் அவரை காப்பாற்ற முயன்ற போது, பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் உயிரிழந்த அந்த இளைஞனை, அப்பகுதி மக்கள் டாடா என்று அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
உயிரிழந்த இளைஞனின் தாய் இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடன் வந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மேலும், துப்பறியும் தலைமை ஆய்வாளர் கிறிஸ் உட் இது குறித்து கூறுகையில், இந்த இளைஞனின் மரணம் குறித்து கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த இளைஞனின் தாய் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இந்த கொலைக்கு காரணமான நபரையோ அல்லது நபர்களையோ கண்டுபிடித்து அவர்களை நீதிக்கு முன் கொண்டு வருவோம் என்று லண்டன் மக்களுக்கு உறுதியளிக்கிறோம்.
இது குறித்து யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.