லண்டன் வீதியில் நடந்த கத்திக்குத்து: 4 பேர் வரை மருத்துவமனையில் அனுமதி
லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்
வியாழக்கிழமை மதியம் தென்கிழக்கு லண்டனின் பரபரப்பான வீதியில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 10ம் திகதி மதியம் 2 மணியளவில் ப்ராம்லி உயர் வீதியில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு சிறப்பு பாராமெடிக் குழுவினர், ஆம்புலன்ஸ் குழுக்கள், வான்வழி ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட 7 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |