மலாவிக்கு பள்ளி சுற்றுலா சென்ற 17 வயது லண்டன் மாணவர்: நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்
மலாவி நாட்டில் லண்டன் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் மாணவர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவிக்கு பள்ளி சுற்றுலா சென்ற 17 வயது லண்டன் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யூஜின் ஈனோக் குவான்(Eugene Enoch Kwon) என்ற சிறுவன் ரிச்மண்ட அபான் தேம்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹாம்டன் பள்ளியில் பயின்று வந்த நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மலாவி ஏரியில் உள்ள மங்கி பே(Monkey Bay) என்ற பகுதியில் உள்ள ஈனோக் குவான் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார்.
இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் பிறகு கடலோரக் காவல் படையினரால் ஈனோக் குவான் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாம்டன் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஹாம்டன் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த கஷ்டமான சூழலில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது மாணவர் குடும்பத்தினருக்கும், பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்கள் சமூகத்திற்கும் தேவையான உளவியல் பயிற்சிகளை வழங்குவதில் முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |