லண்டனில் வசிக்கும் மாணவியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த சீனா... பெருந்தொகை வெகுமதி அறிவிப்பு
லண்டனில் வசிக்கும் 19 வய்தேயான மாணவி ஒருவரை தேடப்படும் குற்றவாளியாக பட்டியலிட்டுள்ள சீன அரசாங்கம், 100,000 டொலர் வெகுமதியும் அறிவித்துள்ளது.
தேடப்படும் குற்றவாளி
19 வயதேயான Chloe Cheung என்பவரே தற்போது சீன அரசாங்கத்தின் தேடப்படும் அதிருப்தியாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஹொங்ஹொங் பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் Chloe Cheung கைது நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தகவல் தெரியப்படுத்துவோருக்கு 100,000 டொலர் வெகுமதி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
பாடசாலை கல்வி முடித்து ஓராண்டு காலம் இடைவெளிக்கு பின்னர் கல்லூரியில் சேரலாம் என முடிவெடுத்திருந்த Chloe Cheung தற்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரித்தானிய காலனியான ஹொங்ஹொங்கில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ஆதரவு பேரணிகளை ஒடுக்க சீன அரசாங்கம் அறிமுகம் செய்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறிய 19 ஜனநாயக ஆர்வலர்களில் மாணவி Chloe Cheung-ம் ஒருவர்.
இந்த நிலையில் ஹொங்ஹொங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டத்தின் கீழ் கடந்த 2021ல் Chloe Cheung மற்றும் அவரது குடும்பத்தினரும் லண்டன் வந்துள்ளனர்.
தற்போது அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி ஒருபோதும் தாயகம் திரும்ப முடியாது என்பதுடன், லண்டனிலும் அவர் எச்சரிக்கையுடன் பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஜனநாயக ஆர்வலரான Chloe Cheung மீது ஹொங்ஹொங் பொலிசார் ஒரு கிற்ஸ்துமஸ் இரவில் கைதாணை பிறப்பித்தனர். அப்போது அவருக்கு 11 வயது. கடந்த 2019ல் ஹொங்ஹொங்கில் வெடித்த ஆர்ப்பாட்டங்களின் ஆரம்ப நாட்களில், Chloe Cheung தனது பள்ளி நண்பர்களுடன் தனது முதல் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
லண்டனிலும் குறிவைக்கப்பட்டுள்ளார்
சீனாவின் கட்டுப்பாட்டை ஹொங்ஹொங் மீது விரிவுபடுத்துவதாகக் கருதப்படும் பிரேரணைக்கு எதிராக ஏராளமான மக்கள் திரண்டனர். ஆனால் அதிகாரிகளின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை புரிந்துகொண்ட அவர் முதலில் பெற்றோருக்குத் தெரியாமல் போராட்டங்களில் சேரத் தொடங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், அவர்கள் சுரங்கப்பாதையில் ஓடிவிட வேண்டியிருந்தது. அந்த சம்பவம் அவர் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
அவர் கைது தொடர்பில் வெகுமதி அறிவிக்கப்பட்டதும், லண்டனிலும் அவர் குறிவைக்கப்பட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் ஹொங்ஹொங்கில் இருந்து குடிபெயர்ந்தவர்களில் பலர் அமைதியாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு இன்னும் ஹொங்ஹொங்கில் குடும்பம் உள்ளது என்றார்.
அவர் மீதான கைதானை அறிவிக்கப்பட்ட நாளில், வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமி தெரிவிக்கையில், வெளிநாட்டில் உள்ள தங்கள் விமர்சகர்களை வற்புறுத்த, அச்சுறுத்த, துன்புறுத்த அல்லது தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு அரசாங்கங்களின் எந்தவொரு முயற்சியையும் பிரித்தானியா பொறுத்துக்கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |