லண்டனில் வாடகை டாக்சி ஓட்டுனரை நம்பிய பெண்களுக்கு தொடர்ச்சியாக நேர்ந்த கதி!
லண்டனில் வாடகை டாக்சி ஓட்டுனரை நம்பி அவர் வாகனத்தில் ஏறி சென்ற பெண்களுக்கு மோசமான சம்பவங்கள் நடந்த நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
Homayon Ahmadi என்ற 33 வயதான டாக்சி ஓட்டுனர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி டாக்சியில் ஏறிய 41 வயதான பெண்ணை வன்கொடுமை செய்திருக்கிறார்.
அடுத்த மூன்று மாதங்கள் கழித்து 21 வயதான பெண் மற்றும் அவர் தோழியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். மேலும் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றவர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் Homayon.
இந்த நிலையில் பொலிசார் அவரை தொடர்ந்து தேடி வந்த போது மது பாட்டில் வாங்கியபடி பதிவான அவர் புகைப்படத்தை வெளியிட்டனர். இதையடுத்து தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு Croydon கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்த சூழலில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து Homayonக்கான தண்டனை விபரம் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இது குறித்து டிடெக்டிவ் கான்ஸ்டபிள் நடாலி அல்சின் கூறுகையில், Homayon மிகவும் ஆபத்தானவன், தனியார் வாடகை ஓட்டுனர் என்ற போர்வையில் எளிதில் தப்ப முடியாத பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் பொலிசாரை அணுகினார்கள். அவர்களின் தைரியத்தால் தான் இன்று Homayon குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். Homayon மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் சிலர் இருக்கலாம் என நினைக்கிறோம்.
அப்படி பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் 101 என்ற எண்ணுக்கு போன் செய்து கூறலாம் என தெரிவித்துள்ளார்.