சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் கொல்லப்பட்ட லண்டன் இளைஞர்: புகைப்படம் வெளியானது...
சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்த பிரித்தானிய இளைஞர் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லண்டனில் வாழும் செல்வந்தர் குடும்பம்
சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார் ஆர்ச்சி (Archie Harvey, 18). ஆர்ச்சியின் பெற்றோர் செல்வந்தர்களான Philip Harvey மற்றும் Sarah Metcalfe என்னும் பிரித்தானிய தம்பதியர்.
இந்தக் குடும்பம், லண்டனிலுள்ள கென்சிங்க்டன் என்னும் இடத்தில், 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீட்டில் வாழ்ந்துவருகிறது. ஆர்ச்சி சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றுவந்துள்ளார்.
பனிச்சறுக்கு விளையாட்டின்போது நிகழ்ந்த பயங்கரம்
கடந்த மாதம் (மார்ச்) 21ஆம் திகதி, ஆர்ச்சி தன் வகுப்பு மாணவர்களுடன் பனிச்சறுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, திடீரென நிகழ்ந்த பனிப்பாறைச் சரிவில் மாணவர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் ஆர்ச்சியும் ஒருவர்.
மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டர்கள் உதவியுடன் பனியில் சிக்கியவர்களைத் தேடும் முயற்சியில் இறங்கினர். ஆர்ச்சியின் உடல் கிடைத்த நிலையில், அவரது சக மாணவியான அமெரிக்க மாணவி ஒருவரின் உடல் இன்னமும் கிடைக்கவில்லை.
பிள்ளைகளை இழந்த குடும்பத்தினர் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.