போலியான ஆடம்பர கடிகாரம்... பிரித்தானியாவில் மூவரால் பரிதாபமாக பறிபோன உயிர்
பிரித்தானியாவில் போலியான ஆடம்பர கடிகாரத்தை நிஜமென நம்பி, இளைஞர் ஒருவரை மூவர் குழு ஒன்று திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொள்ளையிட திட்டம்
சம்பவத்தன்று உணவகம் ஒன்றில் இருந்து வெளியேறியுள்ளார் இமானுவல் ஓடுன்லமி. இசை தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் அப்போது Patek Philippe Nautilus என்ற கைகடிகாரம் ஒன்றை அணிந்திருந்துள்ளார்.
@PA
அதன் மதிப்பு சுமார் 300,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது. உண்மையில் அது போலியானது என்பதை அறிந்திராத அந்த வளாகத்தின் காவலரில் ஒருவரான Kavindu Hettiarachchi என்பவர் அதை காணொளியாக பதிவு செய்துள்ளதுடன், தமது நண்பர்கள் மூவருடன் பகிர்ந்துகொண்டு, கொள்ளையிடவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், இமானுவல் ஓடுன்லமி அந்த குழுவினரிடம் தனியாக சிக்க, காத்திருந்த மூவரும் துரத்தி சென்று கொடூரமாக தாக்கியதுடன், ஒருகட்டத்தில் கத்தியால் இமானுவல் ஓடுன்லமியின் மார்பில் குத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, அந்த கடிகாரத்தையும் பறித்துக்கொண்டு அவர்கள் மாயமாகியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கத்தியால் தாக்கியது உறுதி
இதில் கொலை பழியை ஏற்க Kavindu Hettiarachchi(30) மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் Quincy Ffrench(27), Jordell Menzies(26), மற்றும் Louis Vandrose(27) ஆகிய மூவரும் கொள்ளையிட்டதை ஒப்புக்கொண்டதுடன், கொலை செய்ததை மறுத்துள்ளனர்.
ஆனால் அதிரடி திருப்பமாக Jordell Menzies கத்தியால் தாக்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்றே ஓல்டு பெய்லி நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.