லண்டன் முதல் பிரைட்டன் வரையிலான சைக்கிள் பயணம்: 60 வயது நபர் எதிர்பாராத மரணம்
பிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் முதல் பிரைட்டன் வரையிலான சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்ட 60 வயது நபர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 60 வயது நபர்
பிரித்தானியாவில் லண்டன் முதல் பிரைட்டன் வரையிலான சைக்கிள் பயண நிகழ்ச்சி பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையால்(British Heart Foundation) ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக லண்டன் முதல் பிரைட்டன் வரையிலான சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்ட 60 வயது நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்டு 60 வயது நபர், கேட்விக் விமான நிலையம் அருகே உள்ள சர்ரேயின் ஸ்மால்பீல்டில் பகுதியில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் வேண்டுகோள்
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நேரடி சாட்சியங்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொண்டு சூழ்நிலை குறித்து ஆராய தங்களுக்கு உதவுமாறு பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் சைக்கிள் பயணத்தை நடத்திய பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் தலைமை அதிகாரி சார்மைன் கிரிபித்ஸ், உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
With a heavy heart we share this news. Our team do not have any more information right now but please do keep their family and friends in your thoughts. pic.twitter.com/0cNywI1IjC
— BHF (@TheBHF) June 18, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |