லண்டன் போக்குவரத்து கட்டணம் முடக்கம்: மேயர் சாதிக் கான் அறிவிப்பு
விலைவாசி உயர்வால் அவதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவும் பொருட்டு லண்டனில் பெரும்பாலான பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் இந்த ஆண்டும் அப்படியே தொடரும் என்று மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களும்
குறித்த நடவடிக்கையால் சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் துறை உள்ளிட்டவை பலனடையும் என்றே மேயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களும் கடுமையான விலைவாசி உயர்வால் விழி பிதுங்கியுள்ளனர்.
@reuters
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் உணவு முதல் தளபாடங்கள் வரையில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வானது லண்டன் மக்களை மிகவும் நெருக்கடிக்கு தள்ளியாதாக குறிப்பிட்டுள்ள மேயர் சாதிக் கான்,
2025 மார்ச் வரையில் போக்குவரத்து கட்டணங்கள் முடக்கியுள்ளதுடன், அதன்பொருட்டு 123 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்டண உயர்வில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, மில்லியன் கணக்கான லண்டன்வாசிகளுக்கு போக்குவரத்து சேவையை மிகவும் பயன்படும் வகையில் மாற்றுவதும் முதன்மையான நடவடிக்கை என சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண உயர்வில் இருந்து
மட்டுமின்றி, மக்கள் மீண்டும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நிலைக்கு மாற வேண்டும் என்றார். உண்மையில் 4 சதவிகித கட்டண உயர்வுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது எந்த மாற்றமும் இன்றி பழைய கட்டணமே நீடிக்க உள்ளது.
@pa
இதனால் அதே கட்டணத்தில் பேருந்து, டிராம் சேவை, சுரங்க ரயில் சேவை என அனைத்தும் கட்டண உயர்வில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐரோப்பாவிலேயே மிக அதிக போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கும் நகரம் லண்டன் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |