லண்டனில் பயங்கரம்! 2 பொலிஸார் உட்பட 3 பேருக்கு சரமாரி வெட்டு!
பிரித்தானியாவில் வடக்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டில், ஆபத்தில் இருந்த நபரை காப்பாற்ற சென்ற 2 பொலிஸார் உட்பட 3 பேரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுயத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 61 வயது நபர் மற்றும் ஒரு பொலிஸார் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக லண்டன் மெட் பொலிஸார் கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை 7.20 மணியளவில், Wood Green-ல் உள்ள Noel Park சாலையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, தங்கள் உயிருக்கு ஆபத்து என உதவி கேட்டு அழைப்பு வந்தது.
உடனடியாக இரண்டு பொலிஸார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த ஒரு மர்ம கும்பல், அங்கிருந்த 61 வயது நபர் மற்றும் காப்பாற்ற வந்த இரண்டு பொலிஸாரையும் தாங்கள் வைத்திருந்த வாளால் சரமாரியாக வெட்டினர்.
இந்த சம்பவத்தில் 61 வயது நபர் மற்றும் ஒரு பொலிஸார் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றோரு பொலிஸார் லேசான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தின்றி தப்பினார்.
சம்பவ இடத்திலேயே, தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். மேலும், விசாரணைக்கு பிறகு கூடுதலாக 2 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மூவரையும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடம் இன்னும் அப்படியே பொலிஸ் கண்காணிப்பில் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இது நிச்சயம் பயங்கரவாத தாக்குதலாக இருக்காது என நம்பும் பொலிஸார், சம்பவம் தொடர்பாக விவரம் அறிந்தால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

