லண்டனில் அசத்தும் கேரளப்பெண்! அவர் யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
லண்டன் தெருக்களில் மகிழ்ச்சியாக உலா வந்த பாடகி நஞ்சம்மா.
சமூகவலைதளங்களில் குவியும் வாழ்த்து பதிவுகள்.
ஏழ்மை நிலையில் இருந்து தனது திறமையால் பெரும் புகழ்பெற்ற பாடகி நஞ்சம்மா பிரித்தானியாவுக்கு பறந்து சென்ற நிலையில் லண்டனில் இருந்து வெளியான அவர் புகைப்படம் வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சம்மா, கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லவர். இது பற்றி அறிந்த கலை உலகினர், இவருக்கு 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் பாடல் பாட வாய்ப்பு அளித்தனர்.
அந்த படத்தில் இவர் 'கலக்காத சந்தனமேரம் வெகுவோக பூதிரிக்கும்' என்ற பாடலை பாடினார். படம் வெளியான பின்னர் இந்த பாடல் பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியது. இந்த நிலையில் இந்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக சமீபத்தில் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அறிவித்தது.
இந்த நிலையில் அவரை லண்டனில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க அங்குள்ள அமைப்பு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நஞ்சம்மா விமானத்தில் லண்டனுக்கு பறந்தார்.
அவர் அங்குள்ள தெருக்களில் உற்சாகமாக வலம் வரும் காட்சிகளை அவருடன் சென்றவர்கள் செல்போனில் படம் எடுத்தனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் பாராட்டி மேலும் அவர் உச்சம் தொடர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.