லண்டனில் நீங்கள் ULEZ கட்டணம் செலுத்த வேண்டுமா? விரிவான விளக்கம்
லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ULEZ கட்டணம் அனைவரும் செலுத்த வேண்டுமா அல்லது, கட்டணம் செலுத்த தவறினால் என்னவாகும் என்பது தொடர்பான விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் செலுத்தும் நிலை
லண்டனில் ULEZ எனப்படும் Ultra Low Emission Zone என்பது நாளுக்கு 24 மணி நேரமும், கிறிஸ்துமஸ் நாள் தவிர்த்து, ஆண்டுக்கு ஒவ்வொரு நாளும் காற்றை சுத்தம் செய்யும் பொருட்டு உதவி வருகிறது.
@getty
மேலும் லண்டன் பெருநகரங்களில் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்த வாரம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, அடுத்த மாதம் முதல், குறைந்தபட்ச தரத்தை பூர்த்தி செய்யாத வாகனங்களின் சாரதிகள் லண்டனை சுற்றி வாகனம் செலுத்துவதற்கு அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டதை அடுத்தே, காற்றின் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே விலை உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால் விழி புதுங்கியுள்ள மக்களுக்கு இந்த ULEZ கட்டணமும் நிதிச்சுமையை திணிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
அபராதம் விதிக்கும் அறிவிப்பு
இந்த ULEZ கட்டணம் எப்போது செலுத்த வேண்டும் என்றால், பயணத்தைத் தொடர்ந்து மூன்றாவது நாள் நள்ளிரவில் அல்லது 90 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் பணம் செலுத்தலாம்.
@getty
தினசரி கட்டணம் என்பது கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் சிறப்பு வாகனங்களுக்கு 12.50 பவுண்டுகள், இதே கட்டணம் தான் 5 டன் வரையிலான வேன்களுக்கும் பொருந்தும்.
இந்த ULEZ பகுதியில் பயணப்படும் வாகனங்கள், பயணத்தைத் தொடர்ந்து மூன்றாவது நாள் நள்ளிரவிற்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கென தனியாக செயலியும் அறிமுகம் செய்துள்ளனர்.
தரவிறக்கம் செய்து கொண்டு, அதனூடாக கட்டணம் செலுத்தலாம். உரிய நேரத்தில் கட்டணம் செலுத்த தவறும் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் அறிவிப்பு (PCN) அளிக்கப்படும்.
28 நாட்களுக்கு அபராதம் செலுத்த தவறினால், உங்கள் வாகனத்தை பொறுத்து 240 முதல் 1,500 பவுண்டுகள் வரையில் செலுத்த நேரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |