லண்டன் சுரங்க ரயிலில் இந்திய நபரின் அருவருப்பான செயல்: செய்வதறியாது திகைத்த பெண் பயணி
ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் அருவருப்பாக நடந்து கொண்டதற்காக 16 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியர், மீண்டும் அப்படியான ஒரு வழக்கில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சுரங்க ரயிலில்
வெம்ப்லி பகுதியில் குடியிருக்கும் 43 வயதான முகேஷ் ஷா என்பவரே லண்டன் சுரங்க ரயிலில், தனியாக சிக்கிய பெண் பயணி முன்பு அருவருப்பாக நடந்து கொண்டவர்.
Image: MyLondon
ஏற்கனவே இதுபோன்ற இரு வழக்குகளில் 2014 மற்றும் 2016ல் இந்த முகேஷ் ஷா மொத்தம் 16 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இந்த நிலையில் 2021ல் லண்டன் சுரங்க ரயிலில், இரவு நேரம் தனியாக பயணித்த ஒரு இளம் பெண் முன்பு மீண்டும் அருவருப்பாக நடந்து கொண்டுள்ளார்.
நவம்பர் 4ம் திகதி அந்த இளம் பெண் Sudbury Town மற்றும் Acton Town இடையே பயணித்துள்ளார். உள்ளூர் நேரப்படி இரவு 11.40 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. கோவிட் காலம் என்பதால் தனி மனித இடைவெளி விதிகள் அமுலில் இருந்துள்ளது.
அம்பலப்படுத்த வேண்டும்
இந்த நிலையில் முகேஷ் ஷா அந்த பெண் பயணியின் நேர் எதிரே அமர்ந்துள்ளார். இதனையடுத்தே முகேஷ் ஷா முகம் சுழிக்கும்படி நடந்து கொண்டதாக குறித்த பெண் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Image: MyLondon
உண்மையைச் சொல்வதானால், நான் அதிர்ச்சியடையவில்லை, ஆனால் பயப்படவில்லை என்றே அவர் முகேஷ் ஷாவின் செயல் குறித்து தெரிவித்துள்ளார். இப்படியான நபர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன், தாம் மொபைலில் அவரை படம் பிடித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் முகேஷ் ஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபணமான நிலையில், அவருக்கான தீர்ப்பு மிக விரைவில் வழங்கப்படும் என்றே நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |