குடும்பத்தினர் கண் முன்னே... லண்டன் சுரங்க ரயிலில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
லண்டன் சுரங்க ரயிலில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடும்பத்தினர் கவனிக்கவும் இல்லை
சம்பவத்தை நேரில் பார்த்த பொலிசார், துரிதமாக செயல்பட்டதுடன் 32 வயதான அப்துல்ரிசாக் அலி ஹெர்சி என்பவரை கைதும் செய்துள்ளனர்.
@Shutterstock
கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் திகதி கிரீன் பார்க் பகுதியில் அமைந்துள்ள பிக்காடிலி லைனில் ஏறிய ஹெர்சி வாசலுக்கு அருகில் நின்று பயணித்துள்ளார். அடுத்த நிறுத்தத்தில் ஒரு குடும்பம் அந்த ரயிலில் ஏறியுள்ளது.
இந்த நிலையில், அந்த குடும்பத்தில் 13 வயது சிறுமியை ஹெர்சி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை அந்த குடும்பத்தினர் கவனிக்கவும் இல்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் மாறுவேடத்தில் இருந்த பொலிசார் சிறுமியின் இக்கட்டான நிலையை அறிந்து துரிதமாக செயல்பட்டுள்ளனர். இதனையடுத்து ஹெர்சியை லெய்செஸ்டர் சதுக்கத்தில் இறங்க வைத்து, கைது செய்துள்ளனர்.
18 மாதங்கள் சிறை தண்டனை
இதனிடையே, தமது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தும், பொலிசார் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்துள்ளதால், அவரால் தப்பிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
Image: British Transport Police
இந்த நிலையில் லண்டன் கிரவுன் நீதிமன்றம் மே 5ம் திகதி அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், அறிமுகமில்லாத எந்த பெண்கள் அல்லது சிறுமிகளின் அருகே செல்லவும் 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுரங்க ரயிலில் மாறுவேடத்தில் பொலிசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும், பயண நேரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 61016 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அளிக்கவும் பொலிஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.