லண்டனில் திருவிழா கூட்டத்திற்கு நடுவே குழந்தையை பெற்றெடுத்த பெண்! இணையத்தில் கசிந்த வீடியோ
லண்டனில் நடக்கும் நாட்டிங் ஹில் திருவிழாவின்போது, சாலையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்து தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளித்தன.
லண்டனில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த முறை Notting Hill Carnival திருவிழா நடைபெற்றுவருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 27, சனிக்கிஹ்ஸ்மை தொடங்கி, ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை வரை நடக்கிறது.
திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று, நாட்டிங் ஹில் திருவிழா கூட்டத்திற்குள் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 28, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பெண்ணுக்கு உதவி செய்த ஒருவர் அவசர சேவையை அழைத்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்தக் காணொளியில் சாலையோரம் வலியால் அவதிக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பொலிசார் உதவுவதைக் காண முடிகிறது.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்து ஆரவாரம் கேட்கப்பட்டது. கூட்டத்தில் ஒரு பெண் "அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டது" என்று கூறுவது பதிவாகியுள்ளது. தரையில் குப்பற படுத்திருந்த ஆப்பெண்ணுக்கு சிலர் உதவ முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து லண்டன் ஆம்புலன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார் கூறுகையில், "நாட்டிங் ஹில் கார்னிவல் கால்தடத்தில் ஒரு நபருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். நாங்கள் சம்பவ இடத்தில் ஒரு பெரியவருக்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்" என்றார்.
அந்த பெண் திருவிழாவில் கலந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. அவரது அடையாளங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை மற்றும் குழந்தை மற்றும் தாயின் உடல்நிலை குறித்து இதுவரை எந்த கவலும் வெளியிடப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மற்றும் 2021-ல் ரத்து செய்யப்பட்ட பிறகு, நாட்டிங் ஹில் கார்னிவல் மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக நடக்கிறது. கரீபியன் கலாச்சாரம் மற்றும் லண்டனின் பாரம்பரியத்தில் அதன் செல்வாக்கு ஆகியவற்றைக் கொண்டாடும் மூன்று நாள் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்.