லண்டனில் உள்ள வீட்டில் தீவிபத்து! கடுமையான தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய பெண் உயிரிழப்பு
லண்டனில் உள்ள வீட்டில் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லண்டனின் Mertonல் உள்ள வீட்டில் கடந்த 28ஆம் திகதி காலை 8.30 மணியவில் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்களும், லண்டன் ஏர் ஆம்புலன்ஸும் அங்கு விரைந்தது.
சம்பவ இடத்தில் கடுமையான தீக்காயத்துடன் கிடந்த 50களில் இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last week we informed you about a fire at Leamington avenue which resulted in a woman being taken to hospital with life-threatening injuries. Sadly, the woman has since died in hospital.
— Merton Police (@MPSMerton) November 4, 2021
At this time, the fire is not thought to be suspicious.
Our thoughts are with her family. https://t.co/6u6T1oZX2B
இந்த தகவலை Merton பொலிசார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பான பொலிசாரின் அறிக்கையில், கடந்த வாரம் லீமிங்டன் அவென்யூவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
துரதிர்ஷ்டவசமாக, அந்த பெண் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியது என்று நாங்கள் கருதவில்லை என தெரிவித்துள்ள பொலிசார் தீவிபத்தில் காயமடைந்த மற்ற இருவரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.