லண்டனில் 21 வயது இளம்பெண்ணை கொன்றுவிட்டு வீட்டிற்கு சென்று மது அருந்திய இளைஞர்! தண்டனை அறிவிப்பு
லண்டனில் இளம்பெண் மீது காரை ஏற்றி கொன்ற நபருக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண் மீது மோதிய வாகனம்
Rhiannon Hall என்ற 21 வயது இளம்பெண் இரண்டு குழந்தைகளின் தாயார் ஆவார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு இரவு நண்பர்களுடன் பொழுதை கழித்துவிட்டு சாலையை கடக்கும் போது Alex Barnett (28) என்ற நபர் தனது காரை மோதியிருக்கிறார்.
இதையடுத்து Rhiannon மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் கொடுமை என்னவென்றால் ஏற்கனவே மது விடுதியில் பல மணி நேரம் செலவிட்ட Alex, Rhiannon மீது வாகனத்தை ஏற்றிவிட்டு வீட்டுக்கு சென்றும் மது அருந்தியிருக்கிறார்.
Facebook/rhiannon.hall.184/Met.police.uk/news
தண்டனை விபரம்
இதன்பின்னர் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். Alex மீதான நீதிமன்ற விசாரணை கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.
Alex சிறையில் அடைக்கப்பட்டுள்ளது Rhiannon குடும்பத்தாருக்கு நிம்மதியை கொடுத்துள்ள போதிலும் நாங்கள் அனுபவித்த வலியுடன் ஒப்பிடும்போது இது 'கடலில் ஒரு துளி' தான் என கருத்து தெரிவித்துள்ளனர்.