நான்கு இரவுகளாக தவிக்கிறோம்! லண்டனில் வசிக்கும் இளம்பெண் வைத்த உருக்கமான கோரிக்கை... வெளியான புகைப்படம்
லண்டனில் பெண்ணொருவர் 4 இரவுகளாக காணாமல் போயுள்ள நிலையில் அவரின் மகள் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.
தெற்கு லண்டனை சேர்ந்த விக்டோரியா ரீஸ் என்ற பெண் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளார். அதாவது நான்கு இரவுகள் அவரை காணாமல் பிள்ளைகள் தவித்து வருகின்றனர்.
விக்டோரியாவின் நிலை என்னவாக இருக்கும் என்ற கவலை அவர் குடும்பத்தாருக்கும், பொலிசாருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விக்டோரியா குறித்து யாருக்கேனும் எந்தவொரு தகவல் கிடைந்தாலும் உடனடியாக தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையில் விக்டோரியாவின் மகள் டேனி மோர் வெளியிட்ட உருக்கமான பதிவில், என் தாய் விக்டோரியா குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்ததா?
கடந்த நான்கு இரவுகளாக அவர் அங்கு இருக்கிறார் என தெரியாமல் தவிப்பில் வேதனைப்படுகிறோம், எங்களை அவர் தொடர்பு கொள்ளவும் இல்லை.
விக்டோரியாவை யாராவது பார்த்தாலோ அல்லது அவர் குறித்து தகவல் தெரிந்தாலோ எனக்கு தயவு செய்த் மெசேஜ் செய்யுங்கள்.
அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகிறோம் என கூறி தாயார் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.