லண்டனில் புதரில் நிர்வாணமாக கிடந்த நடுத்தர வயது பெண் சடலம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு
லண்டனில் 45 வயதான பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனை சேர்ந்த Maria Rawlings என்ற 45 வயதான பெண் கடந்தாண்டு மே மாதம் மருத்துவ சிகிச்சை முடிந்து பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பேருந்தில் இருந்து கீழே இறங்கிய Maria Rawlings-வை பின் தொடர்ந்து சென்ற ரோமானியா நாட்டை சேர்ந்த Lazar ஒரு கட்டத்தில் அப்பெண்ணை தனியான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் Maria-வை மரக்கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொன்ற Lazar அவரின் பையை எடுத்து கொண்டு வேறு பேருந்தில் ஏறி சென்றிருக்கிறார். அடுத்தநாள் புதரில் இருந்து நிர்வாண நிலையில் Maria-வின் சடலம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பிரேத பரிசோதனையில் அவர் உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், மிருகத்தனமாக தாக்கியதில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பொலிசார் கொடூரன் Lazar-ஐ கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Mariaன் மறைவு அவர் தந்தை உள்ளிட்ட குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அதிலிருந்து இன்னும் அவர்கள் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில் Lazarக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அவர்களுக்கு சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.