லண்டன் இரயில் நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்றிருந்த ஆணுக்கு இளம்பெண்ணால் நேர்ந்த கதி! புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டன் சுரங்க இரயில் பாதை ஸ்டேசனில் ஆண் ஒருவரை இளம்பெண் தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது கடந்த மே மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு 11.15 மணிக்கு நடந்துள்ளது.
சுரங்க ரயில் பாதை ஸ்டேசனில் உள்ள நடைபாதையின் முனையில் ஆண் ஒருவர் நின்றிருந்தார். அங்கு வந்த இளம்பெண்ணொருவர் அந்த நபரை கால்களால் பின்பக்கமாக வந்து எட்டி உதைக்க அவர் நிலை தடுமாறி விழுந்தார்.
நல்லவேளையாக இதில் அவருக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை, ஆனாலும் கால் மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டதையடுத்து அதற்கான சிகிச்சையை அவர் எடுத்து கொண்டார்.
இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவரிடம் சம்பவம் தொடர்பாக சில கேள்விகளை கேட்க வேண்டும் என பொலிசார் விரும்புகின்றனர்.
அப்பெண் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் சார்பில் கூறப்பட்டுள்ளது.