விலங்குகளுக்கு வழங்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள்..!நெகிழ வைத்த லண்டன் உயிரியல் பூங்கா
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு ஈஸ்டர் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் உயிரியல் பூங்கா
பிரித்தானியாவில் லண்டனில் உள்ள ZSL உயிரியல் பூங்காவில் நூற்றுக்கணக்கான பல்வேறு உயிரினங்கள் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த உயிரியல் பூங்காவில் அழிவு நிலையில் இருக்கும் சுமத்ரா புலிகள், பாலைவன கீரிகள் மற்றும் அணில் குரங்க்குகள் போன்றவையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
Our #Easter activities are off to a cracking start: https://t.co/QKRc4btaR1 While families are busy with the Zoo-normous #EggHunt, our zookeepers are stepping into the role of Easter bunny to make sure our animals don't miss out on the Easter egg-citement! pic.twitter.com/RDZSv3hJQd
— London Zoo (@zsllondonzoo) April 5, 2023
விலங்குகளுக்கு ஈஸ்டர் முட்டை
இந்நிலையில் கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, உணவுகள் அடைக்கப்பட்ட வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள் மற்றும் பொம்மைகள் விலங்குகளுக்கு வழங்கப்பட்டன.
முட்டைகள் அந்தந்த விலங்குகளின் பகுதிக்குள் வைக்கப்பட்ட நிலையில், முட்டைகளை உடைத்து பார்த்த விலங்குகள் அதிலிருந்த தங்களுக்கு பிடித்தமான உணவுகளை உற்சாகமாக உட்கொண்டன.
மேலும் உயிரியல் பூங்காவின் இந்த முயற்சியை கண்டு நெகிழ்ந்துள்ள மக்கள், இந்த முயற்சியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.