லண்டன்வாசிக்கு பிச்சையெடுக்கும் பெண்ணால் ஏற்பட்ட மோசமான வலி! நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி
லண்டன்வாசி ஒருவர் பிச்சைக்காரரால் தான் அனுபவித்த மோசமான அனுபவித்தை பகிர்ந்து மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.
ரெட்டிட் தளத்தில் இது தொடர்பாக எழுதிய நபர் கூறுகையில், ஆக்ஸ்ஃபோர்ட் தெருவைச் சுற்றியுள்ள நபர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். அங்கு பிச்சை எடுக்கும் ஒரு பெண் உள்ளார், அவர் நாம் கவனிக்காத போது நம் கைகளில் திடீரென பூக்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக பணம் அல்லது உணவுகளை கேட்கிறாள்.
நீங்கள் பணம் இல்லை என சொல்லி பூக்களை திருப்பி கொடுத்தால் உங்கள் கைகளை மிகவும் அழுத்தி கிள்ளிவிடுவாள். அது மிகுந்த வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் எனக்கு அப்படி தான் வலி ஏற்பட்டிருக்கிறது.
Mike Kemp/In Pictures via Getty Images
எனக்கு இந்த வலிமிகுந்த மோசமான அனுபவம் டொட்டன்ஹம் நீதிமன்ற சாலை ஸ்டேஷன் அருகே கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த பலரும் தங்களுக்கு அது போன்ற அனுபவம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள பாலம் அருகே இதே போன்ற அனுபவம் கிடைத்ததாக நபர் ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, பிச்சையெடுத்த பெண் தான் உக்ரைனில் இருந்து வந்துள்ளதாக கூறி பணம் கேட்டார். நான் இல்லை என சொன்னவுடன் என் கைகளை இறுக்கி பிடித்து கொண்டாள் என தெரிவித்தார். இதே போல மேலும் சிலரும் தெரிவித்துள்ளனர்.
Mike Kemp/In Pictures via Getty Images