லண்டன் சவுத்ஹாலில் நடந்த இரட்டை கத்திக்குத்து சம்பவம்: சீக்கிய இளைஞர் மீது குற்றச்சாட்டு
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள சவுத்ஹாலில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் ஒன்றில் 2 பேரை கத்தியால் குத்திய வழக்கில் சீக்கியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
லண்டனின் சவுத்ஹாலில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவத்தில் குர்பிரீத் சிங் என்ற 25 வயதுடைய சீக்கியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சவுத்ஹாலில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சி ஒன்றில் இந்த கத்திக்குத்து சம்பவம் அரங்கேறி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
iStock
இதையடுத்து குர்பிரீத் சிங்(25) லண்டனின் உக்ஸ்பிரிட்ஜ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார், அவர் மீது 2 உள்நோக்கத்துடன் கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியது, கூர்மையான ஆயுதத்தால் மிரட்டியது மற்றும் கூர்மையான ஆயுதத்தை வைத்து இருந்தது போன்றவற்றின் கீழ் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குர்பிரீத் சிங் காவலில் வைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 14ம் திகதி லண்டன் ஜல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |