ஜேர்மனியில் பரபரப்பு! பூட்டிய வீட்டில் 2 மாதங்களாக அழுகி கிடந்த சடலம் மீட்பு
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பூட்டிய வீட்டில் 2 மாதங்களாக அழுகி கிடந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை, பெர்லின்-க்ரூஸ்பெர்க்கில் உள்ள லீக்னிட்சர் ஸ்ட்ராஸ்ஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீட்டில் 56 வயதான நபர் ஒருவர் வசித்துவந்தார். திங்கட்கிழமையன்று, அந்த குடியிருப்பை பராமரிக்கும் நிர்வாகத்தினர் பணியாட்களுடன் வந்து அவரது வீட்டின் கதவு மணியை அடித்துள்ளனர், அனால் யாரும் கதவை திறக்கவில்லை.
அதேசமயம், அந்த கதவின் அருகே சென்றால் ஒரு கடுமையான நாற்றம் வருவதை உணர்ந்து, உடனடியாக தீயணைப்பு படை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Photo: spreepicture
பொலிஸார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, அந்த வீட்டுக்கும் அந்த 56 வயதான நபர் இறந்து, அவரது உடல் பெரிதாகி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவறது உடல் கிட்டத்தட்ட 160 கிலோ இருந்துள்ளது. ஆம்புலன்சில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ட்ரெச்சர் 10 கிலோ எடையை மட்டுமே தங்கக்கூடியதாக இருந்தது.
பின்னர், தீயணைப்பு படையினர் அதிக எடையைத் தாங்கக்கூடிய ஹெவி டியூட்டி ஸ்ட்ரெச்சர் எடுத்துவந்து, உடலை தடயவியல் மருத்துவர்களுடன் மோவாபிட்டில் உள்ள பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
Photo: spreepicture
இந்நிலையில் மரணம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிசார் தற்போது தடயவியல் மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
விசாரணை அதிகாரிகளின் முதல் மதிப்பீடுகளின்படி, அந்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடியிருப்பில் இறந்துள்ளார். அந்த கட்டிடத்தில், நடைபாதையில் புதிதாக வர்ணம் பூசப்பட்டிருந்ததால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் சடலங்களின் வாசனையை யாராலும் உணர முடியவில்லை.
அங்கிருக்கும் மற்ற குடியிருப்பாளர்கள் இறந்த மனிதரை ஒரு நல்ல தன்மையுடைய, நட்புடையை அண்டை வீட்டாராக விவரிக்கிறார்கள். ஆனால், அவர் அங்கு இறந்து கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை.Photo: spreepicture