பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவருக்கு Long Covid பாதிப்பு! ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பிரித்தானியார்களில் ஒருவர் குறைந்தது 12 வாரங்களுக்கு தொடர்ந்து அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பிரித்தானிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை நேர்மறையை பரிசோதித்த 1.1 மில்லியன் மக்களில், ரேண்டமாக 20,000-க்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுக்குஇடப்படுத்தப்பட்டனர்.
அதில் 13.7 சதவீதம் பேர் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடித்த அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் சுய-அறிக்கை அறிகுறிகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது. இது Long Covid என்று அழைக்கப்படுகிறது.
சோர்வு, தசை வலி மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு உள்ளிட்ட 13 அறிகுறிகளின் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்கள் 12.7 சதவீதமும், அவர்களை விட பெண்கள் 14.7 சதவீதத்தினர் இதுபோன்ற நீண்டகால அறிகுறிகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
35-49 வயதுடையவர்கள் (25.6 சதவீதத்தினர்) குறைந்தது ஐந்து வாரங்களுக்கு அறிகுறிகளை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. Long Covid "இது இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத ஒரு வளர்ந்து வரும் நிகழ்வு" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில், இதுவரை 4,350,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் கிட்டத்தட்ட 127,000 பேர் இறந்துள்ளனர்.
இருப்பினும், வலுவான தடுப்பூசி திட்டத்தினால் தினசரி இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைந்துள்ளது.
