அதிக விடுமுறை எடுத்தால் பொது தேர்வு எழுத முடியாது... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை!
அதிக விடுமுறையை எடுத்திருந்தால் அந்த மாணவர்கள் பொது தேர்வை எழுத முடியாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதிக விடுமுறை எடுக்கும் மாணவர்கள்
2023-24 ஆம் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்விற்கான பெயர் பட்டியலில் வருகைப்பதிவேடு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு EMIS இணையதளத்தில் இருந்து மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்று தேர்வு எழுது அனுமதி வழங்கியதால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வருகை தரவில்லை. ஆகவே இந்த ஆண்டு வருகை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து கல்வி அலுவலர்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் 2023 மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11 ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே, 2023- 24ஆம் கல்வியாண்டில் +2 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே அனைத்து பாடசாலையில் இருக்கும் தலைமை ஆசிரியர்களும், நவம்பர் 3ஆம் தேதி மதியம் முதல் என்ற www.dge.tn.gov.in இணையத்தளத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்தத்தேதி, பாடத் தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த இணையத்தளத்திற்குள் செல்வதற்கு, அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password பயன்படுத்தி செல்லலாம்.
மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவர் பெயரை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது.
பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கப்படாத, நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவரின் பெயரை தேர்வு பட்டியலில் இருந்து கட்டாயம் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளி முடிந்தவுடன் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |