3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த முரளி ஸ்ரீசங்கர்
நீளம் தாண்டும் போட்டியில் 3-வது முறையாக முரளி ஸ்ரீசங்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
சாதனைப் படைத்த முரளி ஸ்ரீசங்கர்
கிரீஸ், கலிதியாவில் நேற்று சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய சார்பாக முரளி ஸ்ரீசங்கர் கலந்து கொண்டார். ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் களமிறங்கிய முரளி ஸ்ரீசங்கர் 8.18 மீட்டருக்கு நீளம் தாண்டி தங்கம் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இப்போட்டியில் கலந்து கொண்ட இன்னொரு இந்திய வீரரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.85 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்த ஆண்டில் வீரர் முரளி ஸ்ரீசங்கருக்கு மூன்றாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 3வது இந்தியன் கிராண்ட் பிரிக்ஸில் நீளம் தாண்டுதல் போட்டியிலும், இதன் பின்னர் மே மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியிலும் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.