மிகவும் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.., இதன் ரைடிங் ரேஞ்ச் அதிகம்
மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
குறைவான விலையில்
ஜீலியோ இ மொபிலிட்டி (ZELIO E Mobility) என்ற நிறுவனமானது ஏற்கனவே இவா (Eeva) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
தற்போது, அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் Digital display, parking gear மற்றும் cell phone charger ஆகியவை உள்ளன.
இந்த 2025 Eeva Facelift Electric Scooter ஆனது ப்ளூ, க்ரே, ஒயிட் மற்றும் பிளாக் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது, ஜெல் பேட்டரி மற்றும் லித்தியம் அயான் பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜெல் பேட்டரி மாடலில் 60V/32AH வேரியண்ட்டின் விலை 50 ஆயிரம் ரூபாயாகவும், 72V/42AH வேரியண்ட்டின் விலை 54 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஜெல் பேட்டரி மாடலின் 60V/32AH வேரியண்ட்டின் ரைடிங் ரேஞ்ச் (Riding Range) 80 கிலோ மீட்டர்கள் மற்றும் 72V/42AH வேரியண்ட்டின் ரைடிங் ரேஞ்ச் 100 கிலோ மீட்டர்கள் ஆகும்.
லித்தியம் அயான் பேட்டரி மாடலின் 60V/30AH வேரியண்ட்டின் விலை 64 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் ரைடிங் ரேஞ்ச் 90-100 கிலோ மீட்டர்கள் ஆகும்.
இதுவே லித்தியம் அயான் பேட்டரி மாடலின் 74V/32AH வேரியண்ட்டின் விலை 69 ஆயிரம் ரூபாய் ஆகும்.. இதன் ரைடிங் ரேஞ்ச் 120 கிலோ மீட்டர்கள் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |