சுவிட்சர்லாந்தில் இனிமேல் இந்த சலுகை கிடையாது: அரசு அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் இலவச கொரோனா பரிசோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. இன்று முதல் இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மேலும் பலர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்வருவார்கள் என சுவிஸ் அரசு நம்புகிறது.
இலவச பரிசோதனைகள் முடிவுக்கு வந்தாலும், சில விதிவிலக்குகளும் உள்ளன. 16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகள் உடையவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட விரும்புபவர்கள் ஆகியோருக்கு இலவச பரிசோதனை தொடரும். ஆனாலும், அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் வழங்கப்படாது என்பதால், அவர்கள் உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்ல முடியாது.
கடந்த ஆறு மாதங்களாக சுவிஸ் அரசு இலவச கொரோனா பரிசோதனைகளை வழங்கிவருகிறது. ஆனால், சிலர் அதை பயன்படுத்திக்கொண்டு, தடுப்பூசி பெறுவதற்கு பதிலாக, இலவச பரிசோதனைகள் செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழுடன் சுற்றிவருகிறார்கள்.
இனி அப்படி நடக்காது... ஏனென்றால், இலவச பரிசோதனை முடிவுக்கு வருவதால், கொரோனா சான்றிதழ் பெற சொந்தக்காசில் செலவு செய்து பரிசோதனை செய்யவேண்டியிருக்குமே!