கொரோனாவை எதிர்கொள்ள இனி இதைத்தான் செய்யவேண்டும்: இங்கிலாந்து சுகாதார சேவைகள் மூத்த அலுவலர்
கொரோனாவை எதிர்கொள்ள, இனி ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்று கைவசம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதார சேவைகள் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுகாதார சேவைகள் தலைமை எக்சிகியூட்டிவான Amanda Pritchard, ஆண்டுதோறும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்குவதுபோல, இனி கொரோனாவுக்கும் வழங்குவது தொடர்பாக பிரித்தானிய மருத்துவ அமைப்பான என் ஹெச் எஸ் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
வருடாந்திர தேசிய மருத்துவ சேவை வழங்குவோர் மாநாட்டில் உரையாற்றிய Ms Pritchard, அடுத்த கட்ட தடுப்பூசி வழங்கல் தொடர்பான திட்டங்கள் குறித்து பேசும்போது இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
தேவையானால், ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து ஏற்கனவே திட்டமிட்டு வருகிறோம் என்றார் அவர்.