உலகின் நீண்ட பயணம் செய்யக்கூடிய ரயில் பயணம் எது? தெரிந்து கொள்ளுங்கள்
உலகிலேயே மிக நீண்ட தொலைவு செல்லக்கூடிய ரயில் ரஷ்யாவில்தான் இருக்கிறது.
டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே நீண்ட தூரம் செல்லக்கூடிய இந்த ரயிலை இயக்குகிறது. மாஸ்கோ, யூரல் மலைகள், சைபீரியக் காடுகள், பைக்கால் ஏரி போன்றவற்றைக் கடந்து, 9,259 கி.மீ. தொலைவு பயணிக்கிறது.
இந்த ரயிலில் ஏறினால், ஆறு நாட்கள் கழித்துத்தான் கடைசி ரயில் நிலையத்தில் இறங்க முடியும்! இரண்டாவது நீண்ட தொலைவு ரயில் பயணத்தை வைத்திருக்கும் நாடு கனடா.
டொரண்டோவிலிருந்து வான்கூவர் வரை 4,466 கி.மீ. தொலைவு இந்த ரயில் செல்கிறது. மூன்றாவது நீண்ட தொலைவு செல்லும் ரயில், சீனாவில் இருக்கிறது. ஷாங்காயிலிருந்து லாசாவுக்குச் செல்கிறது. 4,373 கி.மீ. தொலைவு இந்த ரயில் பயணிக்கிறது.
நான்காவது இடம் ஆஸ்திரேலியாவுக்கு. சிட்னிலியிருந்து பெர்த் நகரத்துக்கு 4,352 கி.மீ. தொலைவு பயணிக்கிறது.
இந்தியாவுக்கு ஐந்தாம் இடம்.அசாம் மாநிலத்திலுள்ள திப்ருகரிலிருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்குச் செல்லும் ரயில், 4,237 கி.மீ. தொலைவு பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.