கனடாவில் வேலை தேடுகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்
கனடாவில் 2023ஆம் ஆண்டு, அதாவது இந்த ஆண்டில் ட்ரெண்டிங் ஆக உள்ள பணிகள் எவை அல்லது எந்த துறைகள் வெற்றிகரமானதாக இருக்கும் மற்றும் அவற்றிற்கு எவ்வளவு ஊதியம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் ட்ரெண்டிங் ஆக உள்ள பணிகள்
மனித வள மற்றும் பணி வாய்ப்பு நிறுவனமான Randstad Canada, இந்த ஆண்டு எந்த துறைகள் வெற்றிகரமானதாக இருக்கும் மற்றும் அவற்றிற்கு எவ்வளவு ஊதியம் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரம் சற்றே மந்தமானாலும், இன்னமும் பல நிறுவனங்கள் பணியாளர்களைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன கனடாவில்.
எந்தெந்த பணிகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்?
2023ஐப் பொருத்தவரை, தொழில்நுட்பம், மருத்துவத்துறை மற்றும் சேவைத்துறைகளில்தான் உள்ள பணிகளுக்குத்தான் அதிக டிமாண்ட் இருக்குமாம்.
இருந்தாலும், விநியோகம், திறன்மிகு வர்த்தகம், மின்னணு வர்த்தகம் முதலான துறைகளிலும் அதிக தேவை உள்ளதாம்.
ஊதியத்தைப் பொருத்தவரை, கனடாவில் 2023இல், developers, மனித வள மேலாளர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் மற்றும் கட்டுமானத்துறையில் புராஜக்ட் மேனேஜர்கள் ஆகிய பணிகளுக்குத்தான் அதிக ஊதியமாம்.
2023இல் ட்ரெண்டிங் ஆக இருக்கும் டாப் 15 பணிகளும், அவைகளுக்கான ஊதிய விகிதமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
- Developer: $68,000 to $155,000
- HR Manager: $75,000 to $156,000
- Mechanical engineer: $66,000 to $131,000
- Welder: $40,000 to $74,000
- Accounting technician/bookkeeper: $61,000 to $114,000
- Registered nurse: $68,000 to $94,000
- Warehouse worker: $17 to $29 per hour
- Customer service representative: $43,000 to $74,000
- Driver: $42,000 to $65,000
- Sales associate: $46,000 to $84,000
- Administrative assistant: $47,000 to $99,000
- Business analyst: $62,000 to $142,000
- Production supervisor: $53,000 to $114,000
- Digital marketing coordinator: $62,000 to $122,000
- Construction project manager: $61,000 to $150,000