Loose and lose" - இவ்விரண்டு வினைச்சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
Loose
என்ற சொல் வினைச்சொல் அல்ல என சிலர் கூறுவது தவறு. அதை உரிச்சொல்லாகவோ அல்லது வினைச்சொல்லாகவோ அல்லது வினையுரிச்சொல்லாகவோ பயன்படுத்தலாம்.
வினைச்சொல்லாக அதன் பொருள் "தளர்த்து" அல்லது "விடுவி" (=untie, release, set free). "Loose" என்பதை "Loosen" என்ற வினைச்சொல்லாகவும் சொல்லலாம்
எடுத்துக்காட்டு
"She loosed the dogs on the thieves" = "திருடர்களின் மேல் நாய்களை கட்டவிழ்த்து விட்டாள்." இங்கு "loosed" என்ற கடந்த கால வினைச்சொல்லுக்குப் பதிலாக "lost" (= "lose" என்பதின் கடந்த கால வினைச்சொல்) எனப் பயன்படுத்தினால் தவறு.
குறிப்பு - உரிச்சொல்லாக "loose" என்பதன் பொருள் "தளர்த்தப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட அல்லது கட்டவிழ்க்கப்பட்ட நிலையில்" என்று பொருள்
எடுத்துக்காட்டு
He wore loose trousers" = "தளர்ந்த கால்சட்டையை அவன் அணிந்தான்." // "The dogs are loose in the night for her safety" =அவளின் பாதுகாப்பிற்காக இரவில் நாய்கள் கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் இருக்கின்றன."
Lose
என்றால் "தொலை", "தோற்றுப் போதல்" எனப் பொருள் தரும். எ.கா. "Children always lose pencils." / "He lost his wallet." / "They lose the game." இங்கு "lose" / "lost" என்ற சொற்களுக்குப் பதிலாக முறையே "loose" / "loosed" எனப் பயன்படுத்தினால் தவறு.