திடீரென வானில் தூக்கி வீசப்பட்ட கார்..!உயிருடன் வெளியேறிய ஓட்டுநர்: வீடியோ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃப்ரீவேயில் கார் ஒன்று தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கார் விபத்து
அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த பிக்அப் டிரக்கில் இருந்து கழன்ற டயர் ஒன்று, கருப்பு நிற கியா கார் ஒன்றின் மீது மோதியதில் கார் வானில் தூக்கி வீசப்பட்டது.
டிரக்கின் முன் இடது டயர் தளர்ந்து கியாவின் கீழ் வலது புறம் உருண்டது, இதனால் கியா காற்றில் பத்து அடி வரை உயர்ந்து பின் மீண்டும் சாலையில் அமர்ந்தது.
அதே நேரத்தில், டிரக்கில் இருந்து வெளியேறிய டயர் காரை மீண்டும் பின்புறமாக தாக்கியது.
மார்ச் 23ம் திகதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாட்ஸ்வொர்த்தில்(Chatsworth) உள்ள ஃப்ரீவே 118 ல் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அனூப் காத்ராவின் என்பவரின் காரில் உள்ள டேஷ்போர்டு கேமராக்களில் சிக்கியதை அடுத்து, இந்த காட்சிகளை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உயிர் சேதம் இல்லை
இந்த சம்பவத்தின் போது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அவர் காரில் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் பெரிய காயங்கள் எதுவும் இன்றி உயிர் பிழைத்தாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.