ட்விட்டரில் பெயரை மாற்றிய Elon Musk: எகிறும் புதிய Cryptocurrency-ன் மதிப்பு!
டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றியதால் Lorde Edge எனும் புதிய கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துவருகிறது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை லார்ட் எட்ஜ் (Lorde Edge) என மாற்றினார்.
பெயர் மாற்றத்திற்கான சாத்தியமான காரணம் குறித்து ட்விட்டர் வாசிகளிடையே விவாதத்தைத் தூண்டியது.
பெரும்பாலானவர்கள் இது குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் மும்முரமாக இருந்தபோது, சிலர் இதன் மூலமாக பயனடைய ஒரு வழியை விரைவாகக் கண்டுபிடித்தனர்.
எலன் மஸ்க்கைக் கொண்டாடும் வகையில் Lorde Edge ($EDGELON) என்ற பெயரில் புதிய கிரிப்டோகரன்சி திங்களன்று அறிவிக்கப்பட்டது.
இந்த டோக்கன் $0.000003192 என்ற தொடக்க விலையில் திங்களன்று கிரிப்டோ சந்தையில் நேரலைக்கு வந்தது. CoinMarketCap இன் படி, இது சிறிது நேரத்திலேயே $0.00002954 வரை உயர்ந்தது, அதாவது 825 சதவீத உயர்வை பதிவு செய்தது.
முன்னதாக, எலன் மஸ்க் Dogecoin, Shiba Inu போன்ற டோக்கன்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் அந்த இரு நாணயங்களின் மதிப்பும் புதிய பாரமான உச்சத்தைத் தொட்டது.
ஆனால், இந்த டோக்கனுக்கும் எலனுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், இது ஒரு Fan token என்பதால் அதன் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
இந்த டோக்கன் இப்போது மற்றோரு கூர்மையான ஏற்றத்தை கண்டுள்ளது. இன்று அதிகபட்சமாக $0.002990988 வரை சென்றது. தற்போதையை நிலையில் 987 சதவீதம் வரை லாபத்தை பெற்றுள்ளது.
#EDGELON to the MOON!@elonmusk pic.twitter.com/7TMBcsdfiw
— EDGELON (@EDGELONtoken) November 8, 2021