இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடாததால் ரூ.45 கோடி இழப்பு - ஏன் தெரியுமா?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடாததால் ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது.
லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், நடைபெறும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோத உள்ளது.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நியூஸிலாந்து உடனான தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியைடைந்தது.
அதை தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில், 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.
ரூ.45 கோடி இழப்பு
இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்த்திருந்த லார்ட்ஸ் மைதானத்தை நிர்வகிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப், பிரீமியம் டிக்கெட்டுகளுக்கான விலையை அதிகப்படுத்தியிருந்தனர்.
காரணம் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் டிக்கெட்டிற்கு அதிக டிமாண்ட் இருக்கும். அதிக விலை கொடுத்தாவது டிக்கெட் பெற இந்திய ரசிகர்கள் முயற்சி செய்வார்கள்.
தற்போது இந்திய அணி விளையாடாத நிலையில், அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் இருக்கைகள் நிரம்பாது என்பதால், வழக்கமான விலைக்கே டிக்கெட்களை விற்க முடிவெடுத்துள்ளது.
தற்போது, 40 முதல் 90 பவுண்டுகள் வரை டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. இது முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 50 பவுண்டுகள் குறைவாகும்.
இதனால், மெரில்போன் கிரிக்கெட் கிளப்பிற்கு, 4 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.45.08 கோடி) வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |