மேத்யூ ஷார்ட் அணியை சரித்த ஹோல்டர்: அபார பந்துவீச்சில் கிடைத்த வெற்றி
மேஜர் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோவை வீழ்த்தியது.
காலின் மன்ரோ 52 ஓட்டங்கள்
டல்லாஸில் நடந்த போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின.

முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 184 ஓட்டங்கள் குவித்தது. காலின் மன்ரோ 52 ஓட்டங்களும், மேத்யூ ட்ரோம்ப் 49 ஓட்டங்களும் விளாசினர். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய சான் ஃபிரான்ஸிஸ்கோ அணி 19.1 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஹஸன் கான் 45 ஓட்டங்களும், மேத்யூ ஷார்ட் 43 ஓட்டங்களும், ஹம்மத் அஸாம் 40 ஓட்டங்களும் விளாசினர்.
மிரட்டலாக பந்துவீசிய அணித்தலைவர் 4 விக்கெட்டுகளும், ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |