ஸ்டீவ் ஸ்மித்தின் படையை வீழ்த்தி..முதல் முறையாக மகுடம் சூடிய ஹோல்டர் அணி
மேஜர் லீக் தொடர் இறுதிப் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது.
மிரட்டிய சுனில் நரைன்
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் இறுதிப் போட்டி ஆக்லாந்தில் நடந்தது.
Spot on 🎯
— Cognizant Major League Cricket (@MLCricket) July 19, 2026
Sunil Narine takes his third wicket🔥 pic.twitter.com/XQb9s5T2vp
முதலில் ஆடிய நைட் ரைடர்ஸ் அணி 164 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆண்ட்ரே ஃப்ளெட்ஸர் 47 ஓட்டங்களும், கோலின் முன்ரோ 40 ஓட்டங்களும், மேத்யூ ட்ரோம்ப் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
பென் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஓவன், நிகில் சௌத்ரி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
1 ரன்னில்
பின்னர் ஆடிய வாஷிங்டன் அணியில் ஓவன், ஸ்மித், ரவீந்திரா மூவரும் சுனில் நரைனின் சுழலில் மூழ்கினர். ஆன்ட்ரிஸ் கோஸ் 40 ஓட்டங்களும், நிகில் 25 ஓட்டங்களும் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஓபஸ் பியனார் (Obus Pienaar) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பியனார், அடுத்த பந்தில் 53 (24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஸ்கால்க்விக் பந்துவீச்சில் மிலந்தா அவுட் ஆக, 1 ரன் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஹோல்டர் (Holder) தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் முதல் முறையாக மகுடம் சூடியது. சுனில் நரைன் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |