1 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைத்த ஆல்யா மானசா! இந்த பொருள் தான் காரணமாம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா ரோலில் நடித்து ரசிர்களை கவர்ந்தவர் ஆல்யா மானசா.
17 வயதில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய ஆல்யா தற்போது வரை பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
ஆல்யா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர். அதன் பின்பு தான் ராஜா ராணி சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தன்னுடன் நடித்த சஞ்சீவை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
குழந்தை பிறந்தவுடன் ஆல்யா எடை ,அதிகமாக கூடியது. அதிலும் ஆப்ரேஷன் என்பதால் எடை அதிகம் போட்டது.
அதன் பின்பு தான் சரியாக 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்தார். வீட்டிலேயே எடை குறைப்பதற்கு பல டிப்ஸ்களை ஆல்யா ஃபாலோ செய்து இருக்கிறார்.
அதில் முக்கியமான ஒன்று சீரக தண்ணீர். உடல் எடையை குறைக்க என முடிவு எடுத்தவுடன் முதல் நாள் இரவே சீரகத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அதை தண்ணீரில் சேர்த்து சூட வைத்து அந்த தண்ணீரையே தினமும் கிட்டத்தட்ட 3 லிட்டர் வரை குடித்து வந்துள்ளார்.
இந்த சீரக தண்ணீர் அவருக்கு எடை குறைக்க மிகப் பெரிய அளவில் உதவியதாம். அதே போல் முகத்தில் இருக்கும் எடையை குறைக்க காலிபிளவர் சாப்பிடுவதை நிறுத்தினாராம். 65 கிலோ எடையில் இருந்தவர் தற்போது 55 கிலோ எடைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.