ஈழம் தொடர்பான திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்! காரணம் இதுதான்... ஈழப்பெண் லாஸ்லியா ஓபன் டாக்
ஈழம் தொடர்பான திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என லாஸ்லியா கூறியுள்ளார்.
பிக்பாஸ் மூலம் உலக தமிழர்களிடம் பிரபலமானவர் இலங்கை தமிழ்ப்பெண் லாஸ்லியா. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், நான் சென்னையில் தான் வசிக்கிறேன், என் சொந்தங்கள் இன்னும் இலங்கையில் தான் இருக்கின்றனர்.
இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக என் கேரியர் தொடங்கியது, பிக்பாஸுக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் வந்தது.
இலங்கையில் பிறந்து வளர்ந்ததால் அங்கே என்ன நடந்தது என எனக்கு தெரியும். அதனால் ஈழம் தொடர்பான கதைகளில் நடிக்க மாட்டேன், சிலர் இதை ஒரு படமாக தான் நாங்கள் பண்ணியிருக்கோம் என சொல்கிறார்கள்.
என்னை பொறுத்தவரையில் அங்கே நிகழ்ந்தது, பார்த்த விஷயங்கள் எல்லாமே மிக கொடூரமானவை. அப்படியான விடயங்கள் வெளியிடப்படாத படங்களில் என்னால் நடிக்கவே முடியாது என கூறியுள்ளார்.