கவின் திருமணம் குறித்து லாஸ்லியா போட்ட பதிவு.. பதிலடி கொடுத்த கவினின் மனைவி மோனிகா!
நடிகர் கவின் சமீபத்தில் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்துகொண்டார்.
கவினின் திருமணம் குறித்து பிக்பாஸ் லாஸ்லியா பதிவிட்ட பதிவுக்கு கவினின் மனைவியான மோனிகா இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுக்குமாறு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது காதலிப்பதாக தகவல்வெளியானது.
இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒருவரை சந்திக்கவில்லை என்றும் காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் கவின் மற்றும் மோனிகா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் மோனிகாவும் லாஸ்லியாவும் தோழிகள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் - மோனிகா திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து திருமணத்தன்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை’ என்று சூசகமாக கவின் திருமணம் குறித்து பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவிற்கு தற்போது மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அதிகாரபூர்வமாக நான் கவினின் மனைவி ஆகிவிட்டேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் வைரல் ஆகி வருகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |