மொபைல் தொலைந்துவிட்டதா? உடனடியாக UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி?
இன்றைய நவீனமயமான காலத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அபரிவித வளர்ச்சி பெற்றுள்ளது.
இதனால் பணம் பெறுவது, கொடுப்பது மற்றும் மொபைல் ரீசார்ஜ் முதல் வீட்டு வாடகை வரை பெரும்பாலும் யுபிஐ பேமெண்ட்ஸ் (UPI Payments) மூலம் நொடியில் செலுத்தப்பட்டு விடுகிறது.
இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய வணிக வங்கிகளும் UPI-க்கு ஆதரவளித்து வருகின்றன.
UPI-ஐ பயன்படுத்தி BHIM மட்டுமின்றி PhonePe, Google Pay, PayTM உள்ளிட்ட பல ஆப்கள் மூலம் மக்கள் எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதத்தில் மட்டும் நாட்டில் சுமார் 2,800 மில்லியனுக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பண பரிவர்த்தனைகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் UPI பேமெண்ட்ஸ்களை வைத்திருக்கிறார் என்றால், ஒருவேளை அவர் தனது மொபைலை தொலைத்து விட்டால், முறைகேடுகளை தவிர்க்க UPI பேமெண்ட்ஸ்களை செயலிழக்கச் செய்வது முக்கியமான ஒன்று.
ஸ்மார்ட் போன் மூலம் UPI பேமெண்ட்ஸ்களை பயன்படுத்தும் யூஸர்கள், துரதிருஷ்டவசமாக தங்கள் மொபைல் போனை இழந்து விட்டால், அவர்களது இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து (linked bank accounts) UPI பேமெண்ட்ஸ்களை செயலிழக்க செய்ய வேண்டியவை பற்றி பார்க்கலாம்.
மொபைல் ஃபோன் தொலைந்த பின் UPI பேமெண்ட்ஸ்ளை செயலிழக்க செய்வது எப்படி?
உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்ட காரணத்தால் அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் UPI பரிவர்த்தனைகளை Deactivate செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், உங்கள் UPI பின் அல்லது வேறு எந்த முக்கியமான விவரங்களையும் யாருடனும் ஷேர் செய்ய கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கின் கஸ்டமர் கேர் சர்வீஸை தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசி எண்ணை பிளாக் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை உங்கள் சிம் கார்டு அல்லது தொலைந்த மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி வேறு நபர்கள் அல்லது திருடர்கள் பரிவர்த்தனைகளை செய்வதை தடுக்க உதவும்.
2. தொலைந்து போன உங்கள் தொலைபேசி எண்ணை உங்கள் வங்கி கணக்கிலிருந்து பிளாக் செய்ய, நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் ஹெல்ப்லைனை அழைக்கவும். மேலும் அவர்களிடம் உங்களது UPI சர்வீஸை Disable செய்ய கோருங்கள்.
3. உங்கள் மொபைல் ஃபோன் இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யுங்கள். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வசிப்பவர்கள் இதை ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) தளத்தின் FAQ பேஜில் ஒரு யூஸர் தன் மொபைல் ஃபோனை இழந்தால் மொபைல் எண்ணைத் பிளாக் செய்வது முக்கியம் என்று குறிப்பிடும் அதே நேரத்தில், யூஸர்கள் தங்கள் UPI அணுகலை தடுக்க அனுமதிக்க எந்தவொரு தீர்வையும் குறிப்பிடவில்லை.